-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் ஊடாக பொதுச் சுகாதார பரிஙோதகர்களால் திருகோணமலையில் திடீர் சுற்றிவளைப்பொன்று இன்று புதன்கிழமை இடம் பெற்றது.
பொதுச் சுகாத பரிசோதகர்களால் திருகோணமலை நகர பிரதேசத்தில் உள்ள உணவகங்கள் சுற்றி வளைக்கப்பட்டன.
இதில் பாவனைக்கு உதவாதஇ சமைத்த சமைக்காத உணவுகள் ஒரே குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்தமை காலாவதியான பொருட்கள் போன்றவைகள் இனம் காணப்பட்டு கடை உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
சில கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் பாவனைக்கு உதவாத பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

