2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள 5 உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்ரஸிற்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் திருகோணமலை மாவட்டக்கிளைத் தலைவருமான சன்முகம் குகதாசன் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ் தௌபீக் ஆகியோருக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
திருகோணமலை மாநகரசபை, பட்டணமும் சூழலிம் பிரதேச சபை,மூதூர்,குச்சவெளி தம்பலகாமம் ஆகிய உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் இரு கட்சிகளுக்கிடையிலும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது
குறித்த சபைகளில் தவிசாளர் பதவிகளை இரு கட்சிகளும் புரிந்துனர்வின் அடிப்படையில் வகிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.