-மூதூர் நிருபர்-
திருகோணமலை மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவினை இலங்கை தமிழரசுக் கட்சி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது.
பாராளுமன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் வீடு சின்னத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி போட்டியிடுகின்றது.
இந்நிலையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில், கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சண்முகன் சுகதாசன் தலைமையில் வேட்புமனுவினை தாக்கல் செய்தது.