-திருகோணமலை நிருபர்-
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அரச தாதியர் சங்கத்தின் மகளிர் தின விழா இன்று சனிக்கிழமை மாலை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி செயலகத்தின் தொழிற்சங்க உறவுகள் பிரிவும் அரச தாதியர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட செயலாளர் சாமிந்த ஹெட்டியாராச்சி, அரச தாதிய உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய கிழக்கு மாகாண சுகாதார திணைக்கள பணிப்பாளர் டி.ஜீ.எம்.கொஸ்தா ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.
பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போதும் நம் நாட்டில் பெண்கள் அதை வெற்றிகரமாகச் சமாளித்து எதிர்கொண்டார்கள்,
நெருக்கடிகள் தீராத நிலையில், பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டு, பல வேலைகளைச் செய்து வருகின்றனர் எனவும் மகளிர் தினத்தை கொண்டாடுவதில் பெரு மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தாதியர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன் தாதியர்களை கௌரவிக்கும் முகமாக தெரிவு செய்யப்பட்ட தாதிய உத்தியோகத்தர்களுக்கு சமாதான நீதவான் நியமன கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டது.


