-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாதுமை அம்பாள் தமிழ் வித்தியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை “உலக போலியோ தினம் 2023” நினைவு கூறப்பட்டது.
“தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான எதிர்காலம்” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மாணவர்களுக்கான போலியோ பற்றிய விழிப்புணர்வு கருத்துரையை வைத்தியர் ஞானகுணாளன் வழங்கினார்.
இலங்கையில் இருந்து எவ்வாறு போலியோ நோய் ஒழிக்கப்பட்டது என்பது தொடர்பாகவும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.
அத்துடன் ரோட்டரி கழகத்தின் தலைவர் வைத்தியர் சௌந்தரராஜன் அவர்களினால் பாடசாலை நூலகத்திற்கு ஒருதொகுதி புத்தகங்களும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.





மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
