கொழும்பு, தாமரைக் கோபுரத்தில் இருந்து இன்று திங்கட்கிழமை பிற்பகல் கீழே வீழ்ந்து மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த மாணவியின் பையிலிருந்து பாடசாலை காலணிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மாணவி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.