கொழும்பு கஹதுடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகம்மன பகுதியில் நேற்று சனிக்கிழமை வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட தானியங்கி துப்பாக்கி, மகசின் மற்றும் ஐந்து தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோமகம, மாகம்மனாவில் வசிக்கும் 43 வயதுடைய சந்தேக நபரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து கஹதுடுவ மற்றும் மொரகஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்