இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த நில அதிர்வானது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.41 மணியளவில் 6.6 மெக்னிடுயிட்டாக பதிவாகியுள்ளது.
இந்தோனேசியாவின் பெண்டா கடற்பரப்பில் 20 கிலோமீற்றர் கடல் ஆழத்தில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
நில அதிர்வினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
எவ்வாறாயினும் இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.










