நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை நோக்கி அதிவேகமாக பயணித்த கார் நேற்று புதன் கிழமை மாலை 5 மணியளவில் பிரதான வீதியில் உள்ள மலை பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டத்தரணி செலுத்திச்சென்றதாகக் கூறப்படும் குறித்த கார், வேகக் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையில் மோதியதில் விபத்துக்குள்ளானதாக தெரிய வந்துள்ளது.
விபத்தில் சட்டத்தரணிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.