தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் கசிந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக 7 பேர் கொண்ட சுயாதீன விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கல்வியமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தரவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
சுயாதீன விசாரணை அதிகாரிகளும், சுயாதீன கண்காணிப்பு அதிகாரிகள் குழாமும் அந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
குறித்த குழுவின் விசாரணை அறிக்கையை உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும், எமது செய்திச் சேவைக்குக் கருத்துரைத்த கல்வியமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்தார்.