தமிழ் மக்கள் ஒன்று சேர வேண்டும் என கோரும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் முதலில் ஒன்று சேர வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – பூநகரி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், இதுவரையான காலமும் மீனவர்களைப் பயன்படுத்தி இலாபம் ஈட்டிய அரசியல் தரப்பினர் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.