மத்தியில் அரசியலில் மக்கள் எவ்வாறு மாற்றத்தை கொண்டு வந்தார்களோ அதேபோன்று வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் பரப்பிலும் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, அந்த அரசியல் மாற்றம் ஈ.பி.டி.பியின் வசம் செல்ல மக்கள் ஆதரவு வழங்குவார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று நண்பகல் 12 மணியளவில் நிறைவுற்ற நிலையில் பிற்பகள் 3 மணியளவில் மாவட்டங்களின் உதவி தேர்தல் அத்தியட்சகர் அலுவலகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சிகள் சுயேச்சைக் குழுக்கள் விபரம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஈ.பி.டி.பி போட்டியிடும் அனைத்து மாவட்டங்களிலும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடு முழுவதிலும் 10 மாவட்டங்களில் இம்முறை ஈ.பி.டி.பி கட்சி போட்டியிடுகின்றது.
2024 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் ஈபிடிபி வேட்பாளர்களின் பெயர் பட்டியல் உள்ளடங்கிய வேட்பு மனுவே யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்ட அத்தாட்சி அலுவலரிடம் கையளித்தார்
இதேவேளை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர்
இது தொடர்பில் கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா –
‘வடக்கின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்கள் கிழக்கில் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்கள் மற்றும் கொழும்பு, புத்தளம் உள்ளடங்களாக இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் ஈ.பிடி.பி தனது சின்னமான வீணைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது.
மேலும் கொழும்பிலும் புத்தளத்திலும் உள்ள எமது கட்சியின் ஆதரவாளர்கள் கொழுப்பிலும் போட்டியிடுமாறு கோரிக்கை விடுத்திவந்திருந்தனர். அவர்களது கோரிக்கையின் அடிப்படையில் இம்முறை அந்த மாவட்டங்களிலும் போட்டியிடுகின்றது ஈ.பி.டி.பி.
இதேநேரம் ஈ.பிடி.பி ஆரம்பகாலம் முதற்கொண்டு தொடர்ச்சியாக கூறிவருகின்ற தேசிய நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அதை வலுப்படுத்தும் நோக்குடன் கொழும்பு மாவட்டம் பல்லின பல மொழி பேசும் மக்கள் வாழும் இடமாக இருப்பதனால் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் வேட்பாளர்கள் களமிறங்ககின்றனர்.
அந்தவகையில் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது கட்சியின் இலக்கை அடைவதற்கு வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் எமது மக்கள் எமது கட்சிக்கு அணிதிரண்டு வாக்களித்து எம்மை வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகின்றேன் என்றும் அவர் தெரிவித்திருநதமை குறிப்பிடத்தக்கது.