தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
குறித்த சந்திப்பு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வின் அழைப்பின் பேரில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
இதன்போது, இலங்கையின் சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் இலங்கை – இந்திய விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.