-மூதூர் நிருபர்-
திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்து விவசாயம் செய்த 41,000 ஏக்கர் காணிகளை வனவிலாக்கா திணைக்களம் கையகப்படுத்தி உள்ளதாகவும், துறைமுக அதிகார சபையும் காணிகளை கையகப்படுத்த முனைவதாகவும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.அத்தோடு விகாரைகள் அமைப்பதற்கு முனைவதாகவும் தெரிவித்தார்.
தமிழ் தேசிசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகிய திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் அவர்களை வரவேற்கும் நிகழ்வும் , கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று சனிக்கிழமை மாலை மூதூர்-பட்டித்திடல் பிரதேசத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றியவர்,
உரிமைப் பிரச்சினை அபிவிருத்தி பிரச்சினை.இதில் உரிமை தான் முக்கியத்துவம் என குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினராகி குருகிய 7 வாரங்களில் ஐந்து கோடிக்கு மேல் இம் மாவட்டத்தில் அபிவிருத்தி பணிகளை செய்துள்ளேன்.
யாருக்கும் விலை போகாது அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருகிறேன். நானும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் என்கின்ற வகையில் மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்து உள்ளேன் எனவும் குறிப்பிட்டார்.