-பதுளை நிருபர்-
தனது 10 வயது மகளை பாலியல் துன்புறுத்தல் செய்த தந்தை ஒருவரை இன்று செவ்வாய் கிழமை கைது செய்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை வெல்கொல்ல பகுதியை சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை இலங்கை போக்குவரத்து சபை காரியாலய உதவியாளராக கடமை புரியும் குறித்த நபர் தனது மனைவி வயலுக்கு சென்றிருந்த வேளையில் 10 வயதுடைய தனது மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உற்படுத்தியுள்ளதாக குறித்த நபரின் மனைவி பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தான் வீட்டுக்கு வந்த போது மகள் மிகவும் பயந்த நிலையில் இருந்ததாகவும் மகளிடம் வினவிய போது தனது தந்தை தனக்கு செய்த செயலை தன்னிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுமி பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட உள்ளதாக வைத்தியசாலையில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .
சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்