கொழும்பில் தனது திருமணத்துக்கு பணம் சேர்க்க கஞ்சா விற்பனை செய்த இளைஞன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓபத்த கொட்டுகொட பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞன் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த தாயாருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களிடமிருந்து 2 கிலோ 170 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபருக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அதற்கு 15 இலட்சம் ரூபா பணம் தேவைப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.அந்த பணத்தைப் பெற்றுக்கொள்ள வழியில்லாததால் தனது தந்தையிடமிருந்து பெறப்பட்ட 5 இலட்சம் ரூபாவை கொடுத்து கஞ்சாவை வாங்கி விற்பனை செய்து வந்தமையும் தெரியவந்துள்ளது.