தற்போதைக்கு அவர் தனது தனிப்பட்ட பணியாளர் தொகுதியை கலைக்கும் உத்தரவை ரணில் விக்ரமசிங்க பிறப்பித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் சுமார் இருநூறு பேரளவிலான அலுவலகப் பணியாட் தொகுதியினர் கடந்த காலத்தில் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட உத்தியோகத்தர்களாக ஜனாதிபதி அலுவலகத்தில் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று நண்பகல் ஜனாதிபதி மாளிகையை விட்டு ரணில் வெளியேற கூடுமென அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.