முல்லைத்தீவில் நேற்று சனிக்கிழமை இரவு 11 மணியளவில் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைவேலி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இராணுவ சிப்பாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
இராணுவத்தினர் முகாமில் இருந்து அகற்றப்படும் இருப்புகளை விற்பனை செய்து வந்துள்ளார்கள் அதனால் ஏற்பட்ட பண பரிமாற்றம் தொடர்பிலான தகராறால் இவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதையடுத்து, சந்தேகநபர் தடியால் 68 வயது குடும்பஸ்தர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதன்போது காயமடைந்த குடும்பஸ்தர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்