நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகரித்த தங்கத்தின் விலையானது இன்று திங்கட்கிழமை சடுதியாக குறைவடைந்துள்ளது.
இன்றைய நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 747,490 ரூபாவாக காணப்படுகின்றது.
24 கரட் தங்கம் ஒரு கிராம் 26,370 ரூபாவாகவும் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 210,950 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் ஒரு கிராம் 24,180 ரூபாவாகவும் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 193,400 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராம் 23,080 ரூபாவாகவும் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 184,600 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.