கிளிநொச்சி இரணைமடுக்குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் இன்று வியாழக்கிழமை காலை யானையின் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரணைமடுக்குளத்தில் தூண்டில் மீன் பிடிப்பதற்காக சென்ற 65 வயதானவரே யானை தாக்குதலில் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தூண்டிலில் மீன் பிடிப்பதற்காக சைக்கிளில் சென்ற போது யானை தாக்கியுள்ளது.
தாக்குதலுக்குள்ளானவர் உடனடியாக சகமீனவர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.