-கிண்ணியா நிருபர்-
ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் மற்றும் கன மழையினைத் தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் விஷேட வேலைத்திட்டம் நேற்று வியாழக்கிழமை கிண்ணியா நகரசபையின் தவிசாளர் எம்.எம். மஹ்தி அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் கிண்ணியா பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி டொக்ர் ஏ.எம்.எம்.அஜித், பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி, நகர சபை உறுப்பினர்கள், செயலாளர், கோட்டக்கல்வி அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், வர்த்தக சங்கம், நகரசபை உத்தியோகந்தர்கள், ஊழியர்கள், டெங்கு கட்டுப்பாட்டாளர்கள் என பலர் பங்கு பற்றினர்.
கிண்ணியா பிரதான வீதி ஊடாக ஊர்வலமாக வந்து மக்கள் மத்தியில் டெங்கு ஒழிப்பு தொடர்பிலான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. அதிகமாக டெங்கு பரவும் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை பாரபட்சமின்றியும் எடுப்பதாக தவிசாளர் மக்கள் மத்தியில் இதன் போது வலியுறுத்தியுள்ளார்.


