இலங்கையில் கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைச் செய்து துபாயில் பதுங்கியிருந்த 2 இலங்கையர்கள் அந்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் 4 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
கொழும்பு – நுகேகொட பிரதேசத்தைச் சேர்ந்த களுதுர தினேஷ் சாமந்த டி சில்வா என அழைக்கப்படும் ‘பாபி’ மற்றும் மட்டக்குளி – சமித்புர பிரதேசத்தைச் சேர்ந்த கங்கனம்லாகே திமுத்து சதுரங்க பெரேரா ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை 05.10 அளவில் துபாயிலிருந்து வந்த ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்