மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 இளைஞர்கள் டிக் டொக் காணொளிகளை தமது தொலைபேசியில் பதிவுசெய்து கொண்டு சென்றபோது கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இச்சம்பவம் ஹொரண பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது
மூன்று மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இளைஞர்கள் கையடக்கத் தொலைபேசியில் காணொளியை எடுத்துக்கொண்டு அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியதால் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.