“சிங்களே” அமைப்பின் தேசிய அமைப்பாளரும் ஒருங்கிணைப்பாளருமான டான் பிரியசாத் இன்று செவ்வாய்க்கிழமை காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல்காரரை கைது செய்ய வேண்டாம் என்று நானுஓயா பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் டான் பிரியசாத்துக்கு எதிராக நிக்கவெரட்டிய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மேலும் கல்கமுவ நீதவான் நீதிமன்றம் டான் பிரியசாத்துக்கு வெளிநாட்டுப் பயணத் தடையை விதித்ததுடன் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான உத்தரவையும் பிறப்பித்த நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை மேலதிக விசாரணைகளுக்காக டான் பிரியசாத் நிக்கவெரட்டிய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளார்.