ஜெனரல் சேர் ஜோன் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) புதிய வேந்தராக எயார் சீஃப் மார்ஷல் (ஓய்வுபெற்ற) கோலித ஏ. குணதிலக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்குரிய நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நேற்று திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார்.
எயார் சீஃப் மார்ஷல் (ஓய்வுபெற்ற) கோலித ஏ. குணதிலக்க இலங்கை விமானப்படை தளபதியாகவும், பாதுகாப்பு பதவிநிலை பிரதானியாகவும் பணியாற்றியுள்ளார்.









