ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாக்கவிட்ட பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
கடவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்