ஜப்பானில் வேலை பெற்று தருவதாக தெரிவித்து 16.3 மில்லியன் ரூபா மோசடி
ஜப்பானில் வேலை பெற்று தருவதாக தெரிவித்து 16.3 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஏழு முறைப்பாடுகளின் அடிப்படையில் குளியாப்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த மோசடி தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் குளியாப்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
35 மற்றும் 57 வயதுடைய இவர்கள் இம்புல்கொட மற்றும் ஹல்மில்லவெவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்