இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அனுர குமார திஸாநாயக்கவுக்கு, இலங்கைக்கான ஜப்பான் தூதுவரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையிலான நீண்ட கால நட்புறவினை பேணிப் பாதுகாத்து, புதிய ஜனாதிபதியுடன் தொடர்ந்தும் பயணிக்க ஜப்பான் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.