பொதுமக்களின் நாளாந்த பயணக் காலத்தை மிச்சப்படுத்தும் நோக்கில், லங்கா மெட்ரோ ட்ரான்ஸிட் நிறுவனம் தனது போக்குவரத்து வழித்தடங்களில் புதிய நிறுத்தங்களை அறிமுகப்படுத்தி சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது.
இந்த புதிய நடைமுறை இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் வசதிக்காக பின்வரும் பிரதான வழித்தடங்களில் புதிய நிறுத்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
அதன்படி மாகும்புர – கொழும்பு வழித்தடத்தில் பயணிக்கும் மெட்ரோ பேருந்து சேவைகள், பன்னிபிட்டி, தலவத்துகொட, பாலம் துண சந்தை, காஸல் மருத்துவமனை ஆகிய முக்கிய இடங்களில் நின்று செல்லும்.
அதேபோல் மாகும்புர – கடவத்தை வழித்தடத்தில் பயணிக்கும் மெட்ரோ பேருந்து சேவைகள், பன்னிபிட்டி, மஹரகம, நாவின்ன, கிருலப்பனை, இராணுவ வைத்தியசாலை(நாரஹேன்பிட்டி),தெமட்டகொட ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

