-மட்டக்களப்பு நிருபர்-
நாட்டின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்களினால் இன்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டது.
ஒன்பதாவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதனை முன்னிட்டு ஆசி வேண்டி விஷேட பிரார்த்தனைகள் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்றது.
இதன் போது தேசிய மக்கள் கட்சியின் பட்டிருப்பு தொகுதி உறுப்பினர்களும் கொக்கட்டிச்சோலை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

