இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு காங்கிரஸின் மூத்த தலைவரும் மக்களவையின் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்திலேயே அவர் இந்த வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். குறித்த வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு வாழ்த்துக்கள் எனவும் பரஸ்பர வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக நமது நாடுகள் தொடர்ந்து இணைந்து செயல்படட்டும் எனவும் குறித்த வாழ்த்து செய்தியில் பதிவிட்டுள்ளார்.