தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஜனநாயக ஆர்வலர்கள் 45 பேருக்கு எதிராக ஹொங்கொங் உயர் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ஜனநாயக சார்பு சட்டத்தரணியான பென்னி தைக்கு (Benny Tai) 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஏனையவர்களுக்கு 4 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஹொங்கொங் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி பென்னி தைக்கு (Benny Tai) 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹொங்கொங்கின் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட மிக நீண்டகால சிறைத்தண்டனை இதுவாகுமென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் ஹொங்கொங் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.