-மூதூர் நிருபர்-
திருகோணமலை – கந்தளாய், சூரியபுர பகுதியில் அமைந்துள்ள, ஜனரஞ்சன குளத்தை அண்மித்த பகுதியில் சேற்று நிலத்துக்குள் சிக்கி உயிருக்காக போராடிய யானை ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பிரதேச வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஐந்து தினங்களுக்கு மேலாக, இந்த யானை புதையுண்டு, உயிருக்காக போராடிக் கொண்டிருந்த நிலையில், அப்பகுதி விவசாயிகள் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து, குறித்த யானை உயிருடன் காப்பாற்றப்பட்டிருக்கின்றது.
சம்பவ இடத்துக்கு, விரைந்த அதிகாரிகள், பெக்கோ இயந்திரம், வாகனங்கள் மற்றும் விவசாயிகளின் உதவியுடன் பல மணி நேர போராட்டத்தின் பின்னர், யானையை காப்பாற்றியதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.