வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த நிலையில் தாம் உள்ளிட்ட சிலர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
நேற்று அங்கு வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு சென்ற நிலையில் பொலிஸார் தங்களை இடைமறித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் மாலை 6 மணியுடன் வழிபாடுகளை நிறைவு செய்து அங்கிருந்து வெளியேறுமாறு பொலிஸார் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு பணித்துள்ளனர்.
எவ்வாறாயினும் தொடர்ந்தும் வழிபாடுகள் இடம்பெற்ற நிலையில் உழவு இயந்திரம் ஒன்றின் ஊடாக பொலிஸார் அங்கிருந்த பொருட்களை எடுத்து சென்றதுடன் இதன்போது தாம் உள்ளிட்ட தரப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.