புத்தளம் ஆனமடுவ, வடத்த, ஹல்மில்லேவ பகுதியில் ஏற்பட்ட கைகலப்பில் இளைஞன் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆனமடுவ, வதத்த, ஹல்மில்லேவ பகுதியைச் சேர்ந்த ஜெயசுந்தர என்றழைக்கப்படும், சஜீத் திவங்க (வயது – 25) என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
கெட்ட பொல என்றழைக்கப்படும் சூதாட்டத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, உயிரிழந்தவரின் மாமா தடியால் தாக்கிய நிலையில் மருமகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இளைஞனை தடிகளால் அடித்து கொலை செய்தனர் என்றக் குற்றச்சாட்டில், பெண் உட்பட இருவர் சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்ட இளைஞனின் தாயாரின் தம்பி என்றும், இவர், அப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அத்துடன், சந்தேக நபரின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.