-கிண்ணியா நிருபர்-
சுவாமி விபுலானந்தரின் 77 ஆவது நினைவு தினம் இன்று செவ்வாய் கிழமை திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சுவாமி விவேகானந்தர் நூற்றாண்டு விலாசபை ஆலோசகருமான , சண்முகம் குகதாசன், பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தில் பாடசாலை அதிபர்களாக கடமையாற்றிய முன்னாள் தற்போது கடமையில் உள்ள அதிபர்கள் 35க்கு மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
