புளத்சிங்கள, ஏகல்ஒயா பகுதியிலுள்ள பழைய வீடொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இன்று செவ்வாய்கிழமை காலை வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புளத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.
புளத்சிங்கள, அத்துர கோவில் வீதியில் வசிக்கும் 67 வயதான வயோதிபர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
காயமடைந்த குறித்த வயோதிபர் பழைய வீட்டின் சுவர்களை இன்னொரு நபருடன் இணைந்து இடிக்க முற்பட்டபோது ஒருபக்க சுவர் அவர் மீது இடிந்து விழுந்து படுகாயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மற்றைய நபர் மற்றும் பிரதேசவாசிகள் அவரை புளத்சிங்கள வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும் மேலதிக சிகிச்சைகளுக்காக ஹொரண ஆதார வைத்தியசாலையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.