சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்திய நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இந்தியா, தாய்லாந்து, மலேசியா மற்றும் பல நாடுகளுடன் இலங்கையும் இணைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சி இலங்கையை ஆசியாவின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக நிலை நிறுத்தியுள்ளது.
இந்தியா, தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற நாடுகள் முன்னணி வகிப்பதால், இந்த குழுவில் இலங்கை இடம்பிடித்துள்ளமை சுற்றுலாத் துறையில் மிக முக்கிய வளர்ச்சி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வருடத்தில் கடந்த 19ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாட்டுக்கு 2,023,470 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.