-யாழ் நிருபர்-
சுன்னாகம் சந்தைப் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
வாள்வெட்டுக்கு இலக்கானவர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை தனிப்பட்ட பிரச்சினையே வாள் வெட்டுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.