சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பணிபுறக்கணிப்பு இன்று வியாழக்கிழமை காலை 6.30 மணியுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
சுகாதார தொழிற்சங்கங்களின் பிரச்சினைகள் குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை கலந்துரையாடப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன அறிவித்ததை தொடர்ந்து பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் DAT எனப்படும் மேலதிக கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.