சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

-யாழ் நிருபர்-

சுகாதார சேவைகள் திணைக்களப்பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தலைமையிலான சுகாதார அமைச்சின் உயர்அதிகாரிகள் அடங்கிய குழுவினர்கள் கடந்த வெள்ளிக்கிழமை யாழ் போதனா வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்

இக் குழுவினர்கள் எதிர்வரும் காலங்களில் திறந்து வைக்கப்பட்டவிருக்கின்ற புனர் நிர்மானம் செய்யப்பட்டு வரும் நோயாளர்களின் நலன் கருதி 08 தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் எனைய 04 பராமரிப்பு நிலைய கட்டிடத்தொகுதிக்கான நிலையங்களை திறந்துவைப்பதற்கான நடவடிக்கை தொடர்பாக மேற்கொள்ளுவதற்காக இவர்களின் விஜயம் அமைந்துள்ளது.

160 மில்லியன் ரூபா செலவில் இவை அமைக்கப்பட்டு வருகின்றது.

இதில் எதிர்காலத்தின் தேவைகள் கருதி முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி தேவைகள் கருதி சுகாதார சேவைகள் திணைக்களப்பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன ஆராய்ந்து கொண்டார்.

யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கலாநிதி த.சத்தியமூர்த்தி, பிரதிப்பணிப்பாளர் ஸ்ரீபவானந்த ராஜா உள்ளிட்ட பதவிநிலை பணிப்பாளர்கள் மத்திய அரசாங்கத்தின் வைத்திய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.