சிவனொளிபாதமலைக்கு சென்ற டென்மார்க் நாட்டுப் பிரஜை ஒருவர் இன்று திங்கட்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டென்மார்க் நாட்டை சேர்ந்த 68 வயதுடைய நபரே இதன் போது உயிர் இழந்துள்ளார்.
குறித்த வெளிநாட்டு பிரஜை மனைவியுடன் இலங்கைக்குச் சுற்றுலா மேற்கொண்ட நிலையில் இன்று அதிகாலை சிவனொலிபாதமலைக்கு சென்றுள்ளார்.
இதன்போது, ஊசியாறு பகுதியில் அவருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது மஸ்கெலிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்