நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாளை திங்கட்கிழமை சில பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், பியகம ஆரம்ப பாடசாலை மற்றும் யபரலுவ ஆனந்த கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை மேல் மாகாணத்தில் நாளைய தினம் பாடசாலைகளை திறப்பதா இல்லையா என்பதை வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் கலந்துரையாடுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.