-பதுளை நிருபர்-
சிறுவர் தினத்தன்று அடித்து கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவனின் உயிரிழப்பு தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 12 ஆம் திகதி மாத்தளை மேல் நீதிமன்றத்தில் அழைக்கப்பட உள்ளது.
மாத்தளை உல்பத்தமடவள தோட்டத்தைச் சேர்ந்த, பாடசாலை மாணவன் எம்.யுகேஸ் கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி திகதி சிறுவர் தினத்தன்று கொடுரமாக அடித்து கொலை செய்யப்பட்டிருந்தார்
சம்பவம் குறித்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் வழக்கு விசாரணை எதிர் வரும் 12 ஆம் திகதி மாத்தளை மேல் நீதிமன்றத்தில் அழைக்கப்பட உள்ளது.
ஒரு கொடூர கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட குறித்த மாணவனுக்கும், அவரது குடும்பத்திற்கும்,
உண்மையான, பக்கச் சார்பற்ற நீதி உரிய முறையில் கிடைக்கப்பட வேண்டும், அத்துடன் குற்றவாளிகள் உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டும், என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.