நாட்டிலுள்ள பொதுமக்கள் தங்கள் கண்களால் புனித தந்த தாதுவை தரிசித்து வழிபடும் வாய்ப்பை வழங்கும் வகையில் 16 வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் “சிறி தலதா வழிபாடு” நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 3 ஆவது நாளாக இடம்பெறும் “சிறி தலதா வழிபாடு” எதிர்வரும் 27ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நடை பெறவுள்ளது.
இதேவேளை “சிறி தலதா வழிபாடு” மேற்கொள்ள நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் தலதா மாளிகைக்கு வருகை தந்துகொண்டிருக்கின்றனர்.