இலங்கையின் பழம்பெரும் சிங்கள பாடகர் சமன் டி சில்வா தனது 69 ஆவது வயதில் காலமானார் என்பதை அவரது குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இலங்கையின் பைலா இசைத் துறையில் மிகவும் முக்கியமான ஒருவராக சமன் டி சில்வா திகழ்ந்தவர்.
1975இல் தனது இசை வாழ்க்கையை ஆரம்பித்த இவர், கடந்த 4 தசாப்தங்களுக்கும் மேலாக தனது ரசிகர்களுக்காக சிறந்த பாடல்களை பாடி வந்துள்ளார்.
இலங்கை இசையை சர்வதேச பார்வையாளர்களிடம் கொண்டு சென்று, உலகம் முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்துவதில் தனது வாழ்க்கையை கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.