கேகாலை – ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வகவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யடகம பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடமிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 1,200 கிகரெட்டுக்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.