முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிராக, இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உண்மைக்கு புறம்பான அவதூறு பேச்சுக்களை பேசி வருவதாகவும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தனால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடக அறிக்கை
எது எவ்வாறு இருப்பினும் அமரர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் கொலைக்குரிய உண்மையான குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுடன் எவர் ஒருவர் சட்டத்திற்கு முரணாக செயற்படுகின்றாரோ அவர் எந்தவிதமான பாரபட்சம் இன்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி மிக உறுதியாக உள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்