சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரியில் புதிய செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஆலோசனைக்குழு கூட்டம், பாடநெறியைப் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுடனான விசேட ஆலோசனைக்கூட்டம்,மாணவர்களுக்கான விசேட செயலமர்வுகள் போன்றன முன்னெடுக்கப்படுகின்றன.
சமூக ஆர்வலர் கள் ,மதப்பெரியார்கள்,அரசியல்வாதிகள்,பொது அமைப்புக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ரெக்னோ கிரிக்கட் சுற்றுப்பேட்டி ,புதுவருட நோம்புப்பெருநாள் கலாச்சார நிகழ்வுகளை நடாத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
50 ம் ஆண்டில் காலடி பதித்துள்ள கல்லூரியின் பொன்விழா நிகழ்வானது மிகவும் கோலாகலமாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதிபர் தியாகராஜா வுடன்,பிரதி அதிபர் ஹம்சா,பகுதித்தலைவர்களான நயீம்,வரகுணராகவன்,நஸ்வர் ஆகியோர் கைகோர்த்து செயற்படுகின்றனர்.
மூவின மாணவர்களும் உள்ள கல்லூரியின் ஒற்றுமை நிலைநாட்டப்படுகின்றது. ஆலோசனைக்குழு(Advisory Committee)அமைத்த பெருமை முன்னாள் பகுதித்தலைவரும்,விரிவுரையாளரும்,இலங்கை தொழில்நுட்ப கல்விச்சேவையின் அதிகாரியுமான நசீரையே சாரும்.NVQ 3 தொடக்கம்.NVQ 6 வரையான பாடநெறிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.