-சம்மாந்துறை நிருபர்# சியாப் ஆக்கில்-
சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரியில் “ரெக்னோ கிரிக்கட் சுற்றுப்போட்டி ” நடைபெறவுள்ளதாக விளையாட்டு ஆலோசகரும் ,சமூக சேவையாளரும்,இலங்கை தொழில்நுட்ப கல்விச்சேவையின் அதிகாரியும் கணனித்துறை விரிரையாளரும்,தகவல் தொழில்நுட்ப முதுமானிப்பட்டதாரியுமான காரையூர் முத்துலிங்கம் றமணீதரன் தெரிவித்தார்.
8 ஓவர்கள் கொண்ட இப்போட்டியானது ஏதிர்வரும் 5 ம் திகதி ஆரப்பமாகி மூன்று தினங்கள் இடம்பெறும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
11 பேர் கொண்ட 16 குழுக்கள் மோதவுள்ளதாக தெரிவித்த அவர் ,கல்லூரியின் உத்தியோகத்தர் குழுவும் அடங்கும் என்றார்.
விளையாட்டுக்களை முன்னெடுக்க விளையாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.